விழுமியக் கதைகள்

உண்மை நட்பு

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர். ஒருவன் கண்ணன். மற்றொருவன் ராமன். இருவரும் உண்மையான அன்பு கொண்டிருந்தனர். எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பர்.

ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு  வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே  நடக்கத் தொடங்கினர்.

images (8)

   திடீரென்று ஊஊ என்று கண்ணன் குரல் எழுப்பினான்.
அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட ராமன் பட்டென்று கண்ணனின் கன்னத்தில் ஒரு அறை  கொடுத்தான்.திடுக்கிட்ட கண்ணன் சற்றும் கோபப்படாமல் “ராமா , என்னை ஏன் அடித்தாய் ?”என்று  கேட்டான்.

அதற்குக் கண்ணன்  “இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் ”என்றுதான் குரல் எழுப்பினேன் என்றான். செல்லும் வழியில் வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய கண்ணன் ஓடும் நீரில்.’தன்னைத் தன் நண்பன் அடித்து விட்டான்’ என்று எழுதினான். அதைப் பார்த்த ராமன்  ஒன்றும் புரியாமல் திகைத்தான்.

இருவரும் தொடர்ந்து  நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் .வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த கண்ணன் கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான். அதைப் பார்த்த ராமன் அவனைக் காப்பாற்றினான். அதற்காக கண்ணன்  நன்றி சொன்னான்.

சற்று த் தொலைவு சென்றவுடன் கண்ணன்   வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் ராமன்.

“அதுசரி கண்ணா,  முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக்  கல்மேல் எழுதினாயே. அதுதான் ஏனென்று விளங்கவில்லை.”


“நண்பன் தவறாகத்  தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக்  கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு. காட்டுக்கு வெளியே வந்தவுடன்  இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.

பின்னூட்டமொன்றை இடுக