செய்யக் கூடாதன

சிவாலயங்களில் செய்யத்தகாதன

1,குளிக்காமல் ஆலயத்திற்குள்  செல்லக் கூடாது

2,உடையின் மேல் வேட்டி ,சட்டை முதலியன அணிந்து செல்லக் கூடாது

3,வெற்றிலை பாக்கு அருந்துதல்,  எச்சில் துப்புதல், மலசலம்    கழித்தல், முக்கு நீர் சிந்துதல் கூடாது.

4,சிரித்தல், சண்டையிடுதல், வீண் வார்த்தைகள் பேசுதல், உறங்குதல் கூடாது.

5,சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது.

6,பலி பீடத்திற்கும் இறைவன் சந்நிதிக்கும் இடையே போதல் கூடாது.

7,அபிடேகம் நடந்து கொண்டிருக்கும் போது உட்பிரகாரத்தில் வலம் வருதல் கூடாது.

8,வழிபாட்டை அவசர அவசரமாக நிகழ்த்துதல் கூடாது.

9,சுவாமிக்கு நேராகக் காலை நீட்டி வணங்குதல் கூடாது

10, ஈரமான ஆடை அணிந்து செல்லுதல், மயிர்கோதி முடித்தல் கூடாது.

11,காலணி, குடை முதலியனவற்றுடன் உட்செல்லக் கூடாது.