ஆலய தரிசனம்

                ஆலய தரிசன விதிமுறை

1,ஆலய தரிசனம் செய்வோர் நீராடிதூய தோய்த்துலர்ந்த ஆடை அணிந்து திருநீறு, உருத்திராக்கம் போன்றவை அணிந்து கொண்டே செல்ல வேண்டும்.

2,வெற்றிலை,பாக்கு,பழம்,தேங்காய்,மலர்கள் முதலிய வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு போகலாம்.

3,முதலில் ஆலய கோபுரத்தை வணங்க வேண்டும்.

4,உள்ளே சென்று, கொடி மரத்தின் முன்னே, ஆண்கள் தலை மோவாய்,

இருகைகள், ருபுயங்கள், முழந்தாள் இரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் படுமாறு-(அஷ்டாங்க நமஸ்காரம்) வணங்க வேண்டும்.

5.பெண்கள், தலை,ருகைகள், இரு ழுழங்கால்கள் ஆகிய ஜந்தும் நிலத்தில் படுமாறு (பஞ்சாங்க நமஸ்காரம்) வணங்க வேண்டும்

5,கொடி மரத்தின் எதிரில் வணங்கிய பின், நந்தி தேவரிடம் விடைபெற வேண்டும்(மானசீகமாக விடைபெறுதல் மிக அவசியம்).

6. நந்தி தேவரிடம் விடை பெற்றுக் கொண்ட பிறகு, விநாயகரை, சிவபெருமானை ஜந்து முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்

7,சமயாச்சாரியர்கள்,அம்பாள்,நடராசப் பெருமான்,பிற தெய்வங்கள்

யாவற்றையும் வணங்கிவிட்டு, இறுதியாக சண்டேசுவர நாயனாரை அடைந்து மும்முறை கைகளால் தாளமிட்டு,சிவதரிசனப் பலனைத் தந்தருளும்படி வேண்டுதல் அவசியமாகும்.

8,சண்டேசுவர நாயனாரிடம் சிவதரிசனப் பலனைப் பெற்ற பிறகு, கொடி மரத்தின் அருகில் வடக்கு முகமாக அமர்ந்து திருவைந்தெழுத்தை (நமசிவாய)  108முறை தியானித்தல் வேண்டும்.

9,இறுதியாக வைரவரை வணங்கி சிவச்சொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை என்று உறுதி கூறி, கோயிலை விட்டு வெளியே வருதல் வேண்டும்.

அன்றாடம் திருக்கோயில் செல்ல முடியாதவர்கள் குறிப்பிட்ட புண்ணிய

நாட்களிலாவது அவசியம் சென்று வணங்க வேண்டும் கட்டாயமாக சிவத்தல யாத்திரைகளை மேற் கொள்ள வேண்டும்.